உள்ளூர் செய்திகள்
தூய்மை பணி நடந்த காட்சி.

நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழகுபடுத்தும் பணி

Published On 2022-04-06 15:52 IST   |   Update On 2022-04-06 15:52:00 IST
அரசு ஆரம்ப சுகாதார் நிலையம் முதல் மருத்துவ கல்லூரி வரை இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:  

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தலைமை செயலாளரின் அறிவுறுத்த லின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நம் மருத்துவமனை மகத்தா ன மருத்துவமனை முகாம் கொண்டாடப்பட்டது.

அரசு ஆரம்ப சுகாதார் நிலையம் முதல் மருத்துவ கல்லூரி வரை அனைத்து சுகாதார வசதிகளிலும் இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் ஏற்படும் தொற்றுநோயை தடுக்கவும், நோயாளிகள் மருத்துவமனைகளில் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெறும்போது மன நிம்மதியும் இருக்க வேண்டும். 
 
மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களின் தோற்றத்தை அழகுபடுத்துதலே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்டம் முழுவதும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள் மற்றும் நீலகிரி மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த 1-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் மற்றும் வெளிப்புற பகுதிகள் உள்பட முழு மருத்துவமனை வளாகத்தையும் தூய்மையாக பராமரித்தல், கழிப்பறைகள் சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் கரையான்களை அகற்றுதல், அனைத்து குப்பை மற்றும் சேதம் அடைந்த பொருட் களை ஆஸ்பத்திரியில் இருந்து அகற்றும் பணி நடக்கிறது. தூய்மை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து செவிலியர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Similar News