உள்ளூர் செய்திகள்
திரக்கோவில் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
திரக்கோவில் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள திரக்கோவில் கிராமத்தில் உள்ள அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயார் ஆண்டாள் தாயார் பக்த ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப் பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து 7 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நெய் பழங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகள் மூலம் கோபூஜை நாடி சந்தனம் அங்குர்பணம் தம்பதி பூஜை உள்பட 3 கால பூஜைகள் செய்யப்பட்டது.
மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் ஆண்டாள் தாயார் பக்த ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் ஆகிய கோவில் விமான கோபுரங்கள் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரைத் தெளித்தனர் பின்னர் சூரியபகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.