உள்ளூர் செய்திகள்
தடையின்றி மின் வினியோகம் செய்ய வலியுறுத்தல்
தடையின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யவேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 15 துணை மின் நிலையங்களிலிருந்து மாவட்டம் முழுவதும் மின்சாரம் சரியான அழுத்தத்தில் விநியோகம் செய்யப்படுவதில்லை. அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இதனால் விவசாய பம்ப் செட் மூலம் தண்ணீர் பாய்ச்ச இயலாமல், போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து தெளிவாக தெரியாமல் விவசாயிகள் விளை நிலங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
எனவே சரியான அழுத்தத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யவும், மின்சாரம் விநியோகம் செய்யும் நேரம் குறித்து தெளிவாக விவசாயிகளுக்கு முன் அறிவிப்பு செய்யவும் வேண்டும் என அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தடையின்றி மின்விநியாகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.