உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் காங்கிரசார் நூதன போராட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் வரவேற்றார்.
போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், அண்ணாச்சி சின்னத்துரை, குப்பன், இந்திரா பிரியன், முருக பூபதி, குணசேகரன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வினோதினி, மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.