உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து கம்யூனிஸ்டு போராட்டம்
ஆரணி அருகே ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:
பெட்ரோல் டீசல் நாளுக்கு நாள் விலை உயர்வு மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு டோல்கேட் கட்டணம் உயர்வு மருந்து விலை உயர்வு உள்ளிட்டவை விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியோர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் அப்பாசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆரணி அக்ராபாளையம் சாலையிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து பிணத்தை சுமந்து கொண்டும் செல்வதை போல் ஊர்வலமாக சென்று சேவூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆட்டோவை கையிறு கட்டி இழுத்துச் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50&க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.