உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
சொத்து வரி உயர்வை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.மோகன் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ் ராமச்சந்திரன் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.