உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ஸ்ரீநேத்திரவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-04-04 10:54 GMT   |   Update On 2022-04-04 10:54 GMT
பெரம்பலூர் ஸ்ரீநேத்திர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில், சமயபுரம் யானை புனித நீரூற்றி, அருள் மிகு ஸ்ரீநேத்திர விநாய கர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் நேற்று நடந்தது.


பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட  14வது வார்டு இந்திரா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீநேத்திரவிநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடந்தது.

விழாவில், சமயபுரம் யானை பங்கேற்று, பிரம்மபுரீஸ்வர் ஆலயத்திலிருந்து புன்னிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்து  ஸ்ரீநேத்திரவிநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிகளுக்கு ஊற்றி மஹா கும்பா பிஷேகம் செய்து வைத்தது.

இதற்காக, பூசாரி பிரபாகரன் புனித நீரை சுமந்து, யானையின் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்தார். இதைத்தொடர்ந்து, அரசு- வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது.

முன்னதாக, கொல்லி மலை அம்மையார் சித்தர் பீடம் முதல் தலைமை பீடாதி பதி சிவராஜசேகர சிவனடியார் தலைமையில், வாஸ்து வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, குருவழிபாடு,

சங்கல்ப வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மையப்பன் வழிபாடு ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது விழாவில், பம்பை மங்கல வாத்தியங்கள், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், கருப்புசாமி ஆகிய சுவாமி வேடமணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News