உள்ளூர் செய்திகள்
தண்ணீர் பந்தலை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கி திறந்து வைத்த போது எடுத்த படம்.

கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2022-04-04 16:20 IST   |   Update On 2022-04-04 16:20:00 IST
பெரம்பலூரில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் டி.இ.எல்.சி ஆலய கிறிஸ்தவ இளைஞர் இயக்கம் சார்பில் கோடைக்கால தண்ணீர்பந்தல் திறப்பு விழா ஆலயவளாகத்தின் முன்பு நடைபெற்றது.

விழாவில் தேவாலய  பாதிரியார்கள் சார்பில் பவுல், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தலைமை வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தார்.

விழாவில் தேவாலய பங்கு தாரர்கள், தேவஊழியர்கள், மற்றும் இந்தோ டிரஸ்ட் செல்வகுமார், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News