உள்ளூர் செய்திகள்
குன்னூரில் குடியிருப்பு, தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் குட்டிகளுடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தன.
ஊட்டி:
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வனப் பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் என அனைத்தும் கருகி விட்டன. வறட்சி நிலவுவதால் வனத்தில் உள்ள வன வி லங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருந்து 9 காட்டு யானைகள் குட்டிகளுடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தன.
குன்னூர் பகுதியில் உள்ள கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்த யானைகள் முகாமிட்டன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பகுதிகளிலேயே யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வருவதும் இல்லை.
கடந்த ஒரு வார காலமாக கூட்டமாக சுற்றி திரிந்த இந்த யானைகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக 3 குழுக்களாக பிரிந்து உள்ளன. ஒரு கூட்டம் சின்னகரும்பாலம் பகுதியிலும், மற்றொரு யானை கூட்டம் கிளன்டேல் பகுதியிலும், 3&வது யானை கூட்டம் ரன்னிமேடு பகுதிகளிலும் சுற்றி வருகின்றன.
வனத்திற்குள் செல்லாமல் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலேயே யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறி த்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலா காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றி திரிகிறது.
எப்போது எங்கு நிற்கிறது என்பதே தெரிவ தில்லை. தினமும் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வரும் நாங்கள் வேலைக்கு செல்ல முடி யாமல் மிகவும் அவதிய டைந்துள்ளோம். மேலும் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்து டனேயே வாழ்ந்து வருகிறோம்.
எனவே இந்த பகுதிகளில் சுற்றி திரியும் யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறையினரும் குழுவாக பிரிந்து யானைகளின் நடமா ட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.