உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருகே இரவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி
திருவண்ணாமலை அருகே இரவில் ஏற்பட்ட 3 மணிநேர திடீர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் நேற்று இரவு 8மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.
இந்த மின் தடை 11 மணிவரை 3மணி நேரம் நீடித்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பலர் வீட்டுக்குள் இருக்க முடியாமல் வெளியில் வந்தனர். சிலர் மொட்டை மாடிக்கு சென்று மின் இணைப்பு கிடைக்கும் வரை காத்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக அறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது பகல் இரவு என்று அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் தெரிவித்து வேதனைப்பட்டனர்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.