உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சென்னை விமான நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-04-04 13:38 IST   |   Update On 2022-04-04 13:38:00 IST
2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பின்னர் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உள்நாட்டு விமான நிலையத்தில் 328 விமானங்களில் சுமார் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 சர்வதேச விமானங்களில் சுமா£ 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகள் என மொத்தம் 51 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

இனிவரும் நாட்களில் வெளிநாடு, உள்நாட்டு விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Similar News