உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா நடந்தது.
ராஜபாளையம்
யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஷத்திரிய ராஜூக்கள் சமூகம் சார்பில் கொண்டாடப்பட்டது. பழையபாளையம் ராஜூக்கள் சாவடி முன்புள்ள மைதானத்தில் செண்டை மேளம் முழங்க மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏ.கே.டி. தர்மராஜா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ராஜூக்கள் இளைஞர் சங்க தலைவர் பி.வி.ரமேஷ் ராஜா தலைமையில் இளைஞர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் திருவனந்தபுரம் தெரு கோட்டை மைதானத்தில் உள்ள முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜா சிலைக்கு 4 கோட்டை மகாசபை தலைவர் ஜெகநாத ராஜா தலைமையில் யுகாதி விழா கமிட்டி ராஜு, முருகேசன், பிரபாகரன், சரவணன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பஸ் அதிபர் கே.எஸ்.ரங்கசாமி ராஜா, சுதந்திர போராட்ட தியாகி அரங்கசாமி ராஜா, ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.