உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன் கலந்துகொண்டு பேசினார். சேத்துப்பட்டு நகர தலைவர் ஜாபர்அலி வரவேற்றார்.
இதில் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி பட்டாசு வெடித்து மேளம் அடித்தவாறு சவ ஊர்வலம் போல் கொண்டு வந்தனர்.
பின்னர் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை மேலே வைத்து கட்டி காமராஜர் சிலையில் இருந்து சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் வந்தவாசி தெள்ளாறு போளூர் தேவிகாபுரம் ஆரணி சேத்துப்பட்டு உள்பட பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.