உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மணிமேகலை விருதினை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-03-31 15:57 IST   |   Update On 2022-03-31 15:57:00 IST
மணிமேகலை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்-:

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் வரும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள்  

மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு ஊரகவளர்ச்சி துறை அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை மாற்றம், நிதிவரவு செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்பணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம்,

கிராம சபை பங்கேற்பு, மாற்றுதிறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும்

நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் மார்ச் 29 முதல் ஏப்ரல் 5ம் தேதிவரை அளிக்கலாம்.

அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாது.மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி  அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.

Similar News