உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி பேசிய காட்சி-.

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2022-03-30 15:19 IST   |   Update On 2022-03-30 15:19:00 IST
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூரில் நடை பெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்தது.

கருத்தரற்கிற்கு  தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகவேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் முதல்வர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் கலந்துக் கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து போக்குவரத்துதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி விபத்தில்லா பயணம் எனும் லட்சியத்தை அடைய பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் வழிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விவரித்தார்.

இதில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிலையத்தில் பணிபுரியும் 200 டிரைவர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News