உள்ளூர் செய்திகள்
செல்போனுடன் குரங்கு

குரங்கு கையில் செல்போன்

Published On 2022-03-29 13:58 IST   |   Update On 2022-03-29 13:58:00 IST
புதுவை நகரின் மைய பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளது. இங்கு குரங்குகள் கூட்டம், கூட்டமாக குடும்பத் தோடு வசித்து வருகிறது.
புதுச்சேரி:

தாவரவியல் பூங்காவை யொட்டி உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தையின் நுழைவுவாயிலுக்கு அருகில் இளநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த இளநீர் கடைகளில் பெண் வியாபாரி அசந்திருந்த நேரத்தில் அவர் வைத்திருந்த செல்போனை குரங்கு ஒன்று எடுத்துச்சென்றது. மரத்தில் உள்ள பொந்தில் அந்த போனை வைத்துக்கொண்டது. அவ்வப்போது போனை மரக்கிளைக்கு எடுத்துச்செல்வது, அதை அழுத்தி பார்ப்பது என செய்து கொண்டி ருந்தது. ஒரு கட்ட த்தில் போனை பெற அந்த எண்ணுக்கு மற்றொரு வியாபாரி போன் செய்தார். அப்போது குரங்கு அதை காதில் வைத்து வைத்து பார்த்தது. 

இந்த குரங்கின் சேட்டையை அப்பகுதியில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினர். 100&க்கும் மேற்பட்டோர் அங்கு வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். 

பலகட்டமாக செல்போனை திரும்பப்பெற வியாபாரிகள் முயற்சித்தனர். 
ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒருமணி நேரத்துக்கு பிறகு அந்த செல்போனை குரங்கு ஒரு சிமெண்ட் சிலாப்பில் தானே கொண்டுவந்து வைத்துச்சென்றது. அதை அந்த வியாபாரி எடுத்துக்கொண்டார். ஒரு மணிநேரம் குரங்கு சேட்டையால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.

Similar News