உள்ளூர் செய்திகள்
மதகடிப்பட்டு மாட்டுச்சந்தை வழக்கம் போல் இயங்கியது.

மதகடிப்பட்டு மாட்டுசந்தை வழக்கம்போல் இயங்கியது

Published On 2022-03-29 13:54 IST   |   Update On 2022-03-29 13:54:00 IST
முழு அடைப்பு போராட்டத்திலும் மதகடிப்பட்டு மாட்டுசந்தை வழக்கம்போல் இயங்கியது
புதுச்சேரி:

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில்  மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில்   மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டது.

ஆனால்  வேலைநிறுத்தத்தையொட்டி புதுவை எல்லை பகுதியான மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டன.  விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் மதகடிப்பட்டு மாட்டு சந்தை எந்தவித மான தடையும்  இன்றி   இயங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து மாடுகளை விற்பனை செய்தும் மாடு களை வாங்கியும் சென்ற னர். மேலும் இந்த மாட்டுச் சந்தை நடைபெறும் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள் எந்தவித தடையுமின்றி இயங்கியது.

முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News