உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மலை குறவன் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

Published On 2022-03-29 13:51 IST   |   Update On 2022-03-29 13:51:00 IST
மலைகுறவன் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மலைகுறவன் இன மக்களுக்கு அரசாணையின்படி பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மலைகுறவன் பழங்குடியினர் மக்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் அதன் மாநில பொருளாளர் சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான லதாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனு தெரிவித்துள்ளதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் 40 கிராமங்களில் மலைக்குறவன் பழங்குடியினர் சாதியை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மூங்கில் மரத்தினை எடுத்து கூடை செய்து விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

எங்களது சமூக பிள்ளைகள் ஆரம்ப கல்வி முதல் பட்டபடிப்பு வரை படித்து வருகின்றனர். எங்கள் இன மக்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி சான்று கடந்த 5 ஆண்டுகளாக தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
இதனால் ஜாதி சான்றிதழ் பெறமுடியாமலும்,  மாணவ, மாணவிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் தவிர்த்து வருகின்றனர். எனவே எங்களது இன குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கி அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News