உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-03-29 11:16 IST   |   Update On 2022-03-29 11:16:00 IST
வில்லியனூர் அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் அண்ணா மலைநகரை சேர்ந்தவர் ரகு. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் விக்கிரவாண்டி அருகே ஒலக்கூரை சேர்ந்த உறவினர் பெண்ணான சந்தியா (வயது20) என்பவ ருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களாக சந்தியா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில்   சந்தியாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடியில் உள்ள கூரையில் இரும்பு பைப்பில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News