உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து சித்ரவதை

Published On 2022-03-29 10:45 IST   |   Update On 2022-03-29 10:45:00 IST
வேறொரு திருமணம் செய்து கொள்ள காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன்-மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை நயினார்மண்டபம் வண்ணார வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் சவுமியா(வயது30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்பியம்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சவுமியா புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணம் செய்தது முதல் அன்பழகனின் தாய்  மற்றும் சகோதரியை மதிக்கவில்லை என்று அவர்கள் சவுமியா விடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தனர்.

மேலும் தாய் மற்றும் சகோதரியின் பேச்சை கேட்டு அவர்களுக்கு ஆதரவாக அன்பழகன் சவுமியாவை அடித்து சித்ரவதை  செய்து வந்தார்.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விவகாரத்து செய்வதாகவும் அதற்கான நோட்டீஸ் தபால் அலுவலகத்தில் சென்று வாங்கி கொள்ளுமாறு சவுமியாவிடம் அன்பழகன் செல்போனில் தெரிவித்ததார்.  இதை கேட்டு சவுமியா அதிர்ச்சியடைந்து வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்  சவுமியா தனது கணவர் அன்பழகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் தகாத வார்த்தைகளால் சவுமியாவை திட்டினார்.

மேலும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அன்பழகன் தூக்கி சென்று தனது தாயாரிடம் கொடுத்து விட்டு சவுமியாவை சரமாரியாக தாக்கினார். மேலும் அவருடன் சேர்ந்த அவரது தாய் ஜெயலட்சுமி, உறவினர் கமலவள்ளி ஆகியோர் சவுமியாவை ஆடையை பிடித்து கிழித்து வீட்டை விட்டு வெளியே தூரத்தினர்.

அதோடு 3 பேரும் சேர்ந்து சவுமியாவை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். உடனே சவுமியா இதுபற்றி அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சவுமியா பின்னர் இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News