உள்ளூர் செய்திகள்
ஆரணியில் பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவ, மாணவிகள்.

ஆரணியில் அரசு பஸ்கள் ஓடாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதி

Published On 2022-03-28 15:34 IST   |   Update On 2022-03-28 15:34:00 IST
ஆரணியில் அரசு பஸ்கள் ஓடாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஆரணி:

ஆரணி போக்குவரத்து பணிமனையில் 78 பஸ்கள் இயங்குகின்றன. இதில் மேலாளர் உட்பட 456 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தால் 78 பஸ்களில் வெறும் 5 பஸ்கள் மட்டும் ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ& மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளி ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் கடும் அவதிகுள்ளாயினர்.

இதனால் வேறுவழியின்றி தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் வட்டார தலைவர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News