உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோடை காலத்தையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோடை காலத்தையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.
இக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பக்தர்கள் அவதிப்படக்கூடாது என்று அருணாச்சலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்களுக்கு கோவில் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள் இன்று காலை பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.அதனை ஏராளமான பக்தர்கள் வாங்கி பருகி தாகம் தணிந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.