உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர் கைது

Published On 2022-03-28 14:47 IST   |   Update On 2022-03-28 14:47:00 IST
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  மணி உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமம், கீழவீதியைச் சேர்ந்த விக்ரம்  வயது 20 என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து,  அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை  பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, விக்ரமை போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News