உள்ளூர் செய்திகள்
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்
பெரம்பலூரில் மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இந்திய மருத்துவ சங்க கிளை மற்றும் மகளிர் மருத்துவப்பிரிவு, திருச்சி காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் மகளிருக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதாகர், பொருளாளர் சத்யா, துணை தலைவர் விஜய் ஆனந்த், டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமினை முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மூத்த டாக்டர் தங்கராஜ் உட்பட பலர் பேசினர்.
முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவை பரிசோதனை, ஹீமோ குளோபின் பரிசோதனை, பாப்ஸ்மியர் பரிசோதனை, மார்பக பரிசோதனை, இதயப் பரிசோதனை, எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை, கால் பராமரிப்பு பரிசோதனை மற்றும் தலைமுடி பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் என 200க்கும் மேற்பட்டோருக்கு செய்யப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் அம்பிகா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் சுமதி செங்குட்டுவன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.