உள்ளூர் செய்திகள்
வர்த்தக சபை நிர்வாக குழு தேர்தல்
புதுவை வர்த்தக சபை நிர்வாக குழு தேர்தல் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை வர்த்தக சபையின் நிர்வாக குழுவின் பதவிக் காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. உள்பட 20 பேர் போட்டியிட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆயுட்கால உறுப்பினர்கள் 240 பேரும், ஆண்டு சந்தா உறுப்பினர்கள் 67 பேரும் வாக்களிக்கின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.