உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

போலி தங்க காசு விற்பனை வழக்கில் 2 பேர் கைது

Published On 2022-03-25 15:54 IST   |   Update On 2022-03-25 15:54:00 IST
போலி தங்க காசு விற்பனை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள நகை அடகு கடையில் கடந்த   பிப்ரவரி 16 ந்தேதி போலி தங்க காசுகளை  விற்பனை செய்து பணம் பெற்று மோசடி செய்தது  தொடர்பாக கொடுத்த புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை  நடத்தியதில் செட்டிக் குளத்தை சேர்ந்த பால முருகன் (30), லாடபுரத்தை சேர்ந்த வரதராஜன் (33), பெரம்பலூரை சேர்ந்த பிரபு (53), எசனை பாப்பாங்கரையை  சேர்ந்த  சுரேஷ் (33) ஆகியோர் போலி தங்ககாசுகளை விற்று பண மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வரதராஜன், பாலமுருகன் ஆகிய 2 பேரை ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி கைது செய்து சிறையில்  அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், பிரபு ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர்.    

இந்தநிலையில் சுரேஷ், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சுரேஷ் பெரம்பலூர் குற்றவியல்    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவாளி பிரபு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News