உள்ளூர் செய்திகள்
மின்துறை அதிகாரிகளுக்கு கென்னடி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த காட்சி.

மின் வெட்டு குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-03-25 11:40 IST   |   Update On 2022-03-25 11:40:00 IST
மின்வெட்டு குறித்த தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:


 புதுவை அரசு மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இதில் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பங்கேற்றார்.

 இந் நிகழ்ச்சியில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் நகர செயற்பொறியாளர் கனியமுதன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சுரேஷ், மற்றும் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசும்போது, உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அமைத்தல் புது மின் இணைப்பில் உள்ள தாமதம், மின்வெட்டு, சமயங்களில் பொதுமக்களுக்கு முன்னதாகவே சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் மின் துறையை தனியார் மயமாக்குவதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை என அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் மின்துறை அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து இதுவரை சமநிலையாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கென்னடி எம்.எல்.ஏ. பாராட்டினார். 

இதில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல் அவை தலைவர் ரவி மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், கிளை செயலாளர் செல்வம், காலப்பன், விஷாலிங்கம், பீட்டர், குணசீலன், பாலாஜி, லாரன்ஸ், மோரிஸ், ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News