உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க முடியாது

Published On 2022-03-23 12:22 IST   |   Update On 2022-03-23 12:22:00 IST
பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க முடியாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

உலக தண்ணீர் தினத்தையொட்டி, பெரம்பலூர் அருகிலுள்ள வடக்குமாதவியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்துக்குத் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படும் ஆய்வகத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில், குடிப்பதற்குத் தகுதியாக உள்ளதாக சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

எனவே ஊராட்சிக்குள்பட்ட கிணறு, ஏரி உள்ளிட்டவைகளில் மழைநீரை சுத்தமான, சுகாதாரமான முறையில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குழாய்களில் வரும் குடிநீரை முறையாக பயன்படுத்திக் கொண்டால், நீர் நிலைகளிலுள்ள நீரை கால்நடைகளின் இதர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி, அலுவலர்களைக் கொண்டு நீர் மேலாண்மையைக் கடைப்பிடிக்க முடியாது என்றார்.

Similar News