உள்ளூர் செய்திகள்
முதலிடம் பெற்ற பெரியகோட்டை கிரிக்கெட் அணிக்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்திகுமார் பரிசு வழங்

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி

Published On 2022-03-22 15:45 IST   |   Update On 2022-03-22 15:45:00 IST
சிவகங்கையில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
காரைக்குடி

முதல்வர் மு.க.ஸ்டா லினின்  பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி என்.ஜி.ஓ. காலனி மைதானத்தில் நடந்தது. 

முதல் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் தென்னவன் தொடங்கி வைத்தார். 2ம் நாள் போட்டிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி  வைத்தார்.

இதில் மொத்தம் 24அணிகள் கலந்துகொண்டன. நாக்அவுட் முறையில் நடை பெற்ற  போட்டிகளில் பெரியகோட்டை எம்.சி.சி.சி. அணியும், காரைக்குடி பிளாஸ்டர் வாரியர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் பெரியகோட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

2ம் பரிசை பிளாஸ்டர் வாரியர்ஸ் அணியும், 3ம் பரிசை தினேஷ் நினைவு கழனிவாசல் அணியும், 4-ம் பரிசை டி.கே.எம். மணி பிரதர்ஸ் அண்ணாநகர் அணியும் தட்டிச் சென்றன. 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமை தாங்கி கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த் பிரதீப்குமார், சேதுபதி ராஜா, ரவி, பொற்கோ, தமிழ்நம்பி முன்னிலை வகித்தனர்.

நகரசெயலாளர் குணசேகரன், நகர்மன்ற தலைவர் முத்துதுரை, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மாவட்ட மகளிரணி செயலாளர் பவானி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சத்யா ராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமா செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணாத்தாள், தெய்வானை உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் ஜான் பீட்டர்,  பிரசன்னா, தாய்சீனா, தினகரன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.
முதலிடம் பெற்ற அணி சிவகங்கை மாவட்டம் சார்பில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறது.

Similar News