உள்ளூர் செய்திகள்
இந்தியர்கள் ஊர் திரும்பியதால் மலேசியாவில் தொழில்கள் முடக்கம்
இந்தியர்கள் ஊர் திரும்பியதால் மலேசியாவில் தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளது என்று அந் நாட்டின் முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்குமார். இவர் தனியார் நிறுவன குழுமங்களின் தலைவராக உள்ளார். இவர் மலேசியாஉள்ளிட்ட வெளிநாடுகளில் எண்ணை நிறுவனங்கள், வணிக நிறுவ னங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குமாரை சந்திப்பதற்காக மலேசியா நாட்டின் முதன்மை ஆணையர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது பூலாம்பாடி வந்திருந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மலேசியாவில் 20 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். பின்னர் வந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அதில் 80 சதவீதம்பேர் நாடு திரும்பினர். அதன் விளை வாக மலேசியா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் மலேசியாவில் இந்திய மருத்துவ மாணவர்கள் தங்களின் கல்வியை தொடர்கிறார்கள். ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
எங்கள் நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முழு அளவிலான தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தடையின்றி அனுமதிக்கப்பட உள்ளனர். உக்ரைன் போரில் கூட மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை என் றார்.
பின்னர் தனியார் நிறுவன குழும தலைவர் குமார் கூறும்போது, வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் எனக்கு மலேசியாவில் ஆயில், கியாஸ், கட்டுமான தொழில்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் முடங்கின. இருப்பினும் எனது மாவட் டம் மற்றும் சொந்த ஊர் மக்களுக்கு எதையாவது செய்ய விரும்புகிறேன். பூலாம்பாடியில் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் ரூ.10 கோடி செவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன் என்றார்.