உள்ளூர் செய்திகள்
உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் சரிவிகித உணவின் அவசியம் குறித்த போஷன் பக்வாடா முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா கூறியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 4-ந்தேதி வரை போஷன் பக்வாடா முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 27-ந்தேதி வரை 6 வயது வரையுள்ள ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டசத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற 28, 29 தேதிகளில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை பரிசோனை முகாம், ஏப்ரல் 2,3 தேதிகளில் பழங்குடியினர் பகுதிகளில் பாரம்பரிய உணவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஏப்ரல் 4-ந்தேதி போஷன் பக்வாடா நிறைவு விழா நடைபெறும் என்றார்.