உள்ளூர் செய்திகள்
மின்தடை

திருப்பத்தூரில் நாளை மின்தடை

Published On 2022-03-21 15:51 IST   |   Update On 2022-03-21 15:51:00 IST
திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் செல்லத்துரை தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணைமின்நிலையம் மற்றும் திருப்பத்தூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெரும் உயரழுத்த மின்பாதையில் முக்கிய பராமரிப்பு பணிகள்  நாளை(22ந்தேதி) நடைபெறுகிறது. 

எனவே நாளை காலை 10மணி முதல் 2மணி வரை  திருப்பத்தூர் பீடர் பகுதியான மின்நகர், மீன் மார்க்கெட், மதுரைரோடு, காலேஜ்ரோடு, அஞ்சலக வீதி, 4ரோடு, கணேஷ்நகர் உள்ளிட்ட திருப்புத்தூர் நகர் முழுவதும் கே.வைர வன்பட்டி, தென்கரைபீடர் பகுதியான மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என்.வைரவன்பட்டி. மாதவராயன்பட்டி பீடர் பகுதியான திருக் கோஷ்டியூர், கருவேல் குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணாநகர், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, சுண் ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, எம். வலையபட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை  திருப்பத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Similar News