உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அ.ம.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

Published On 2022-03-21 12:29 IST   |   Update On 2022-03-21 12:29:00 IST
அ.ம.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்ட அ.ம.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன், பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான மனோகரன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் அணி செயலாளர் பழனிவேல், இலக்கிய அணி செயலாளர் இளவரசன், மாவட்ட அவைத் தலைவர் மோகன், தகவல்

தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் கலைவாணன், மதுபாலன் மற்றும் அணி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயக்குமார், ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாடாலூர் வீரமுத்து,

வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் கண்ணுசாமி, வெங்கலம்சேகர், வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நல்லறிக்கை இளங்கோவன், பெரம்பலூர் நகர செயலாளர் பீமா ரஞ்சித் மற்றும் பேரூர் சிற்றூராட்சி கட்சி உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News