உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

முதல்வரை பற்றி அவதூறாக பேசியவர் மீது வழக்கு

Published On 2022-03-21 06:01 GMT   |   Update On 2022-03-21 06:01 GMT
முதல்வரை பற்றி அவதூறாக பேசிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமம், காம ராஜர் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக் மகன் அப்துல் வாஹிப் (வயது 28) பொறியியல் பட்டதாரியான இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தந்தை பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியாகவும், அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும் உள்ளார். கடந்த 8&ந்தேதி சொந்த ஊருக்கு வந்த வாஹிப்க்கு  13&ந்தேதி  தொழுதூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து கடந்த 18&ந்தேதி திருச்சி வழியாக துபாய்க்கு சென்று விட்டார். இந்நிலையில் அப்துல் வாஹிப் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை யும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய வீடி யோவை சமூக ஊடகங்களில் பரப்பியிருக்கிறார்.

இது குறித்து தி.மு.க. நகர இளைஞரணி அமைப் பாளர் அப்துல் கரீம் (38) அளித்த புகாரின் பேரில் அப்துல் வாஹிப் மீது பெரம்பலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
Tags:    

Similar News