உள்ளூர் செய்திகள்
வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூரில் நடை பெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று, அனுமதிசீட்டு, இன்சூரன்ஸ் போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த வாகன சோதனையில் ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்று எப்.சி, இன்சூரன்ஸ் ஆகியஆவணங்கள் முறையாக இல்லாமல் இயக்கப்பட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, அபராதம் ரூபாய் 42,000 விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.