உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது வழக்கு

Published On 2022-03-20 10:55 IST   |   Update On 2022-03-20 10:55:00 IST
குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சே. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ (வயது 45). இவர், துறைமங்கலம் பகுதியில் குவாரி வைத்து நடத்தி வருகிறார்.

இவரிடம் பெரம்பலூர் நகராட்சியின் 8-&வது வார்டு கவுன்சிலரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளருமான தங்க. சண்முகசுந்தரம், 9-&வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியாவின் கணவரும், தி.மு.க. கிளைச் செயலருமான மணிவாசகம் மற்றும் துறைமங்கலத்தைச் சேர் ந்த தென்றல் சரவணன், பிச்சை, அண்ணாதுரை, தங்கவேல் உள்ளிட்ட சிலர், 

குவாரியிலிருந்து லாரிகள் மூலம் லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோபெரம்பலூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் வி.சி.க. கவுன்சிலர் தங்க சண்முகசுந்தரம், தி.மு.க. கவுன்சிலரின் கணவர் மணிவாசகம் உட்பட 8 பேர் மீது போலீசர் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 8&வது வார்டு பகுதியில் குவாரியிலிருந்து வரும் லாரிகள் எங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News