உள்ளூர் செய்திகள்
கோதண்டராம சுவாமி பங்குனி மகா தேரோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கோதண்டராம சுவாமி பங்குனி மகா தேரோட்டம் நடந்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள 500 வருடம் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத மகா தேர் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சனிக்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப் பட்டு ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித் தார்.
இந்த நிலையில் மகா தேரோட்டத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை முதலே சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேரில் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோவிந்தா.. கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
விழாவில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50&க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவில் வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் 50&க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.