உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சுயதொழில் தொடங்க ரூ.2.10 கோடி கடனுதவிகள்

Published On 2022-03-19 15:57 IST   |   Update On 2022-03-19 15:57:00 IST
சுயதொழில் தொடங்க ரூ.2.10 கோடி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர், வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.பி. மணி முன்னிலை வகித்தார், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வங்கி கிளையை திறந்துவைத்து பேசுகையில் அவர்கூறியதாவது,

பொது மக்களுக்கு தேவையான கடன் உதவிகளை காலதாமதம் செய்யாமல் தேவையின் அடிப்படையில் விரைந்து வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வங்கி கிளையிலும், தகவல் மையம் அமைத்து மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சுயதொழில் தொடங்குவதற்காக 6 பயனாளிகளுக்கு ரூ. 2.10 கோடி கடன் உதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நீரஜ்குமார் பாண்டா, பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்காக ரூ.2.50 லட்சம் காசோலையினை எஸ்பி மணியிடம் வழங்கினார். விழாவில் சேலம் துணை பொது மேலாளர் பிரசன்னகுமார், மண்டல மேலாளர் ஹேமா மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News