உள்ளூர் செய்திகள்
தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிக் குட்பட்ட ஏவிஎஸ் லே-அவுட்டில் குடியிருப்பவர் சூடேஷ் (வயது 37). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த 8&ந் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மல்லசந்திரம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நெக்லஸ், தோடு , வளையல், மோதிரம் உள்பட 6 பவுன் தங்க நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை காணவில்லை.
வீட்டின் கதவு பூட்டை உடைத்து மர்ம கும்பல் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சூடேஷ், தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ் பி. கிருத்திகா, இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த கோபா லப்பன் மகன் முனிராஜ் (24), பெங்களூர் கொல்லூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த முனியப்பா மகன் சதீஷ் (21), பெங்களுர் ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் நாகேஷ் (21) ஆகிய 3 பேர் கொள்ளையடித்து விசாரனையில் தெரியவந்தது
இதையடுத்து முனிராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் ஒசூர் சிறையில் அடைத்தனர் .