உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வை தொடங்கி வைத்த

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-03-19 15:20 IST   |   Update On 2022-03-19 15:20:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான முதல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பேசியதாவது:&

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள் மற்றும் தேநீர் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், வாழை இலைகள், தாமரை இலைகள், பாக்குமர இலைகள், உலோக தட்டுகள், பீங்கான் தட்டுகள் மற்றும் குவளைகள், உலோக குவளைகள் மற்றும் கொள்கலன், கண் ணாடி குவளைகள் மற்றும் பாட்டில்கள் ஆகிய பொருட் கள் பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Similar News