உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-03-19 14:15 IST   |   Update On 2022-03-19 14:15:00 IST
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
மானாமதுரை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை ப்ளு நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.  முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் வரவேற்றார். 

கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர், இளையான்குடி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), வட்டார மேலாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

சென்னை,   மனிதவள மேலாளர் ராம்கி வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கினார். பின்னர் நடைபெற்ற நேர்முக தேர்வில் 151பேர் கலந்துகொண்டதில் 115பேர் தேர்வுபெற்றனர். 

தேர்வுபெற்றவர்களுக்கு கல்லூரி ஆட்சிகுழுஉறுப்பினர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ், நசீர் கான், அபூபக்கர் சித்திக், துணைமுதல்வர்  ஜஹாங்கிர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர்  ஷபினுல்லாஹ்கான், ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர். 

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஷம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார்.

Similar News