உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள அத்திகானூர் பகுதியில் எருது விடும் விழா நடந்தது. இந்த எருதாட்ட விழாவில் 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான காளைகளை வீரர்கள் அடக்கினர்.
இந்த எருதாட்ட விழாவில் திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் அடுத்துள்ள கரம்பூர் கிராமத்தை சேர்ந்த காந்தி (வயது55) என்பவர் கலந்து கொண்டு கண்டு கழித்து விட்டு இருந்தார்.
அப்போது அவர் பேண்டில் வைத்திருந்த மணி பர்சை பிளேடு போட்டு ஒருவர் 1600 பணத்தை திருடினார். இதனை சுதாரித்த காந்தி அவரை பிடித்தார். பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களும் அந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த திருடனை பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த திருடன் கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்த வேலன் (38) என்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.