உள்ளூர் செய்திகள்
குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி
கோடை சீசன் நடைபெறுவதை முன்னிட்டு மலர் செடிகள், நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரேமாவதி தொடங்கி வைத்தார்.
குன்னூர்:
குன்னூரில் அருகே உள்ள காட்டேரி பூங்காவிற்கு 2020& 2021 ஆம் ஆண்டில் 25 ஆயிரத்து 371 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில் இந்தாண்டு கோடை சீசன் நடைபெறுவதை முன்னிட்டு மலர் செடிகள், நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரேமாவதி தொடங்கி வைத்தார்.
இதில் 30&க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம், பிரிமுளா உள்பட 30 வகை ரகங்களை கொண்ட மலர் நாற்றுகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகளை பூங்காவில் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் பெபிதா, மேலாளர் ஹரி பாஸ்கர், நேசமணி, குமார், தேவிகா உட்பட தோட்டக்கலை அலுவலர்களும், பூங்கா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.