உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை பெரிய ஏரியில் தெப்ப உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பெரிய ஏரியில் தெப்ப உற்சவம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் கங்கே மத குலத்தார் (மீனவ சமுதாயம்) சார்பாக நேற்று இரவு பெரிய ஏரியில் தெப்ப உற்சவம் பெற்றது.
முன்னதாக ஸ்ரீ பேட்டராய சுவாமி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி ,சமேத ஸ்ரீ பேட்டராய சுவாமி உற்சவ மூர்த்திகளை பல்லக்குதேரில் அமர்த்தி வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து தேவராஜன் ஏரியில் உள்ள உற்சவ மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கங்கே மத குலத்தார் சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தி பெரிய ஏரியில் மின்னொளியில் அமைக் கப்பட்டிருந்த தெப்பத்தில் பேட்டராயசுவாமி உற்சவ சிலைகளை வைத்து ஏரி முழுவதும் வலம் வந்தனர்.
நிகழ்ச்சியில் கர்லா சுற்றுதல், கம்பு மற்றும் கத்தி சுற்றுதல், போன்ற சாகச நிகழ்ச்சிகளை இளைஞர்கள் செய்து காண்பித்தனர் .வாணவேடிக்கைகள் நடைபெற்றது இதனை காண தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுபுற பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.