உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் பலி சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், டி.வி.கே நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் நவீன்குமார் (வயது 23). இவர் திருச்சியில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்தியா (19) என்ற பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தம்பை அருகே வந்துக்கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலை மையத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சந்தியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.