உள்ளூர் செய்திகள்
நாடுகாணியில் நடுரோட்டில் கார் மீது விழுந்த மரம்
கூடலூர் நகரில் உள்ள விருந்தினர் மாளிகை செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
ஊட்டி:
கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி - நிலம்பூர் சாலையில் உள்ள மிகப்பெரிய சாம்பிராணி மரம் பிரதான சாலையின் குறுக்கே விழுந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அறுத்து அகற்றினர்.
அதேபோல, கூடலூர் நகரில் உள்ள விருந்தினர் மாளிகை செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் மீது மரம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.