உள்ளூர் செய்திகள்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் திருக்கல்யாண உற்சவம்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் அமைந்துள்ளது தண்டாயுத பாணி திருக்கோவில்.இத் திருக் கோவில் மாவட்டத்தின் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
இக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் 6-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து இரவு மேளதாளம் முழங்க திருவீதி உலாவும் நடந்து வருகிறது.விழாவின் 7ம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து தீபாரதனை நடை பெற்றது.
விழாவினை கூத்தனூர் மூப்பனார் வகையறா நிலக்கிழார்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.திருக்கல் யாண உற்சவத்தில் செயலர் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டாணி தேசிகன், செட்டிகுளம், நாட்டார் மங்கலம், கூத்தனூர், இரூர், பாடாலூர், குரூர், பொம்மனப்பாடி போன்ற கிராமகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மார்ச் 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தொடங்கி நடக்கிறது.