உள்ளூர் செய்திகள்
திருவிழாவில் பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்.

கோவில் பங்குனி திருவிழா

Published On 2022-03-16 11:17 GMT   |   Update On 2022-03-16 11:17 GMT
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் மாசி&பங்குனி திருவிழா நடந்தது.
காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசித்தி பெற்ற மீனாட்சிபுரம்  லலிதா முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி&பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டிற்கான மாசி பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 8ந் தேதி நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காப்பு கட்டிய நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்துதல், காவடி, பறவைக்காவடி எடுத்து வந்து அம்பாளுக்கு நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர். 

நேற்று இரவு அம்பாளுக்கு மது, முளைப்பாரி, கரகம், தீச்சட்டி எடுத்து வந்தனர். இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம், பூக்குழி இறங்குதல் செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.தினமும் பல்வேறு சமு தாயத்தினர், சங்கங்களின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின்படி காரைக்குடி துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையில் 500&க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையதுறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News