உள்ளூர் செய்திகள்
செட்டியார்குளத்தை சீரமைக்கும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி

குளம் சீரமைப்பு பணி

Published On 2022-03-15 16:38 IST   |   Update On 2022-03-15 16:38:00 IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செட்டியார் குளம் சீரமைக்கும் பணி நடந்தது.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள செட்டியார்குளத்தை சீரமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. கலெக்டர்  மதுசூதன்ரெட்டி தலை மையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி திட்ட இயக்குநர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பல முத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் ஜான்முகமது மற்றும் பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.




Similar News