உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்ப

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

Published On 2022-03-15 16:26 IST   |   Update On 2022-03-15 16:26:00 IST
தேவகோட்டையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
தேவகோட்டை, 

சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் காவல்ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 
தேவகோட்டை பஸ் நிலையம் அருகே இருசக்கர வாகனஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் 2 பேருக்குமேல் பயணம் செய்ய வேண்டாம், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம், மது அருந்தி வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
 
மேலும் வாகனம் ஓட்டும் போது புகை பிடிக்க வேண்டாம் என்றும், நான்குசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் துணை கண் காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவ ணன் மற்றும் போலீசார்  வழங்கினர். 

சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி, ரேக்ஸ், மற்றும் போக்குவரத்து துறை சார்பு ஆய்வாளர்கள், காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

Similar News